இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு (MPC), ஏப்ரல் 2026-க்கான தனது இருமாத நிதிக் கொள்கை அறிவிப்பில், ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்திலேயே மாற்றமின்றித் தொடர ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று அறிவித்தார்.
இந்த முடிவு சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க அமைந்துள்ளது. இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளதுடன், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை நிலைப்பாடு ‘நடுநிலை’ அதாவது நியூட்ரல் என்ற நிலையிலேயே தொடர்கிறது.
2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனது முதல் பணவியல் கொள்கை அறிக்கையில் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


0 Comments