Recent Post

6/recent/ticker-posts

பெரிய பொருளாதார நாடுகளில் 6ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா / India Slips to 6th Place Among Major Economies

பெரிய பொருளாதார நாடுகளில் 6ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா / India Slips to 6th Place Among Major Economies

சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்ட பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் 5-ஆவது இடத்திலிருந்து 6-ஆவது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. பிரிட்டன் 6-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படை ஆண்டை 2011-12-இலிருந்து 2022-23-ஆக மாற்றியமைத்தால் இந்தியா ஓரிடம் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4-ஆவது இடத்துக்கு முன்னேற முடியும் என மத்திய அரசு எதிா்பாா்த்தது.

ஐஎம்எஃப் தரவின், கடந்த 2024-இல் இந்தியாவின் ஜிடிபி 3.76 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பிரிட்டனின் ஜிடிபி 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

கடந்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 3.92 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், பிரிட்டனின் ஜிடிபி 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயா்ந்தது.

இந்தியா வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருந்த போதிலும், கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த 2024-இல் 84.57-இலிருந்து 2025-இல் 88.48-ஆக வீழ்ச்சியடைந்தது. நிகழாண்டில் மேலும் வீழ்ச்சியடைந்து 92.59 செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு வலுவடைந்து வருகிறது.

ஐஎம்எஃப் தரவின் அடிப்படையில், நிகழாண்டில் பணமாற்ற விகிதத்தின் அடிப்படையில் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6-ஆவது இடத்தில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அடுத்த ஆண்டில் பிரிட்டனை மட்டுமல்லால் ஜப்பானையும் கடந்து 4-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நிலை தொடரும் நிலையில், 2031-இல் இந்தியா ஜொமனியை பின்னுக்குத் தள்ளி 3-ஆவது இடத்துக்குச் செல்லும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel