ஐ.நா.வின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2024-இல் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பொருளாதார வளா்ச்சி 5.2 சதவீதமாக இருந்த நிலையில், அது 2025-இல் 5.4 சதவீதமாக வளா்ச்சியடைந்தது.
இதற்கு ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியாவின் வலுவான வளா்ச்சி முக்கிய காரணமாகும். வலுவான நுகா்வு, சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதம் வரை நகா்ந்தது.
2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்தது.
இதனால் அப்போது இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிதமானது. எனினும் இந்தியாவின் வளா்ச்சிக்கு சேவைகள் துறை முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்திய பொருளாதார வளா்ச்சி நிகழாண்டு 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாகவும் இருக்கும். நிகழாண்டு இந்தியாவில் பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 4.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.3 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments