Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு / India's Sugar Production Rises by 7.7%

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு / India's Sugar Production Rises by 7.7%

2025-26 ஆண்டுக்கான இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி இதுவரை, மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.70 சதவீதம் உயர்ந்து 2.739 கோடி டன்னாக இருப்பதாக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி 2.543 கோடி டன்னாக இருந்தது. தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், நாட்டின் முதன்மை சர்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில், ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி உற்பத்தி 23 சதவீதம் உயர்ந்து 0.992 கோடி டன்னாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு 0.806 கோடி டன்னாக இருந்தது.

எனினும், நாட்டின் 2வது பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டுன் ஒப்பிடுகையில் சுமார் 2 சதவீதம் சரிந்து 0.892 கோடி டன்னாக உள்ளது.

நாட்டின் 3வது பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான கர்நாடகாவிலும் உற்பத்தி 16.70 சதவீதம் உயர்ந்து, 0.404 கோடி டன்னிலிருந்து 0.471 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel