ஆந்திர பிரதேச மாநிலத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா, மாநிலங்களவையில் இன்று (ஏப்.2) ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, புதன்கிழமையில் மக்களவையிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இம்மசோதா குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரின் ஒப்புதல் கிடைத்ததும், 2026 ஜூன் 2 முதல் ஆந்திர தலைநகா் அமராவதி என்று சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்துவிடும்.


0 Comments