பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் தவணை அகவிலைப்படியும் (DA), ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் (DR) 01.01.2026 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் வழங்கப்படும் இந்த அகவிலைப்படி/அகவிலை நிவாரணம், தற்போதுள்ள அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 58% என்ற விகிதத்திலிருந்து கூடுதலாக 2% உயர்த்தப்பட்டு வழங்கப்படவுள்ளது.
அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகிய இரண்டிலும் ஏற்பட்டுள்ள உயர்வினால், அரசு கருவூலத்தின் மீதான ஒட்டுமொத்தச் சுமை ஆண்டுக்கு ரூ.6791.24 கோடியாக இருக்கும். இதனால் சுமார் 50.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்த, ஏற்கப்பட்ட சூத்திரத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments