பாடத்திட்டங்களை உருவாக்குவதை முதன்மைப் பணியாகச் செய்து வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்துக்கு (என்சிஇஆா்டி) நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) வழங்கப்பட்டுள்ளது.
என்சிஇஆா்டி, தனது சொந்த பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஆலோசனையின் பேரில், மத்திய கல்வி அமைச்சகம், என்சிஇஆா்டி மற்றும் அதன் கீழ் இயங்கும் ஆறு நிறுவனங்களுக்கும் ஒரு தனித்துவமான பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவித்துள்ளது.
இந்த ஆறு நிறுவனங்களில் அஜ்மீர், போபால், புவனேஸ்வர், மைசூர் மற்றும் ஷில்லாங்கில் உள்ள மண்டலக் கல்வி நிறுவனங்களும், போபாலில் உள்ள பண்டிதர் சுந்தர்லால் சர்மா மத்திய தொழிற்கல்வி நிறுவனமும் அடங்கும்.


0 Comments