வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மேம்பட்ட கவச வாகனங்கள் (தண்டவாள மற்றும் சக்கர வாகனங்கள்), பாதுகாப்புத் துறை (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) செயலாளர் மற்றும் டி.ஆர்.டி.ஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் அவர்களால், மகாராஷ்டிராவின் அஹில்யானகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வக வளாகத்தில் ஏப்ரல் 25, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன.
பாதுகாப்புப் படைகளின் வளர்ந்து வரும் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வாகனங்களிலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 30 மி.மீ. ஆளில்லா சுழல் பீரங்கி (Crewless Turret) பொருத்தப்பட்டுள்ளது.
இது, வாகனங்களின் இயங்குதன்மை, தாக்குதல் திறன் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
உயர் சக்தி எஞ்சின் மற்றும் தானியங்கி கியர் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், அதிக சக்தி-எடை விகிதம், அதிவேகத் திறன், சரிவு மற்றும் தடைகளைத் தாண்டிச் செல்லும் திறன், STANAG நிலை 4 மற்றும் 5 பாதுகாப்புடன், முழுமையான வெடிப்பு மற்றும் எறிபொருள் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
நீர் ஜெட்களை இணைப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட நீர் தடைகளைத் தாண்டும் திறன் கொண்ட நீர்நில வாழ் அமைப்பு, செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
30 மிமீ ஆளில்லா சுழல் கோபுரம் மற்றும் 7.62 மிமீ பி.கே.டி பீரங்கி ஆகியவை, டாங்கெதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகளையும் ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படை வடிவமைப்பு, பலதரப்பட்ட பணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் திறன்களைக் கொண்டுள்ளது. இதில் 65% உள்நாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இதை 90% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தளங்களின் உற்பத்தி, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் ஆகிய இரண்டு தொழில் கூட்டாளர்களால், பல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு, வளர்ந்து வரும் பாதுகாப்புச் சூழலமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
.jpg)

0 Comments