ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த பிரம்மாண்டமானத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
வெள்ளை மாளிகை நிர்ணயித்திருந்த இறுதி எச்சரிக்கை காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரமே இருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மற்றும் சீனாவின் ராஜதந்திர அழுத்தத்தால் ஈட்டப்பட்ட இந்த இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம், ஒரு மாபெரும் இக்கட்டான சூழலைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவைத் தொடர்ந்து அதன் ராணுவ நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முதற்கட்ட உடன்பாடும் ஏற்பட்டுள்ளது.


0 Comments