Recent Post

6/recent/ticker-posts

ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல் / United Arab Emirates Withdraws from OPEC

ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல் / United Arab Emirates Withdraws from OPEC

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதிலடி கொடுத்ததுடன், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் மூடியது.

இதனால், உலகளவில் பல்வேறு நாடுகளில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், சில நாடுகளில் விலையும் உயர்த்தப்பட்டது.

இதனிடையே, எண்ணெய்யின் விலையை உயர்த்துவதன் மூலம் மற்ற நாடுகளை பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (OPEC - ஒபெக்) சுரண்டுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், எண்ணெய்யைக் கொண்டு செல்வதில் ஒபெக் வளைகுடா உற்பத்தியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2026 மே 1-லிருந்து ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகுவதாக அறிவித்துள்ளது. 1960-ல் தொடங்கப்பட்ட ஒபெக் அமைப்பில் 1967 முதல் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்றி வந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel