தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 2026ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தேர்ச்சி அடைந்த மாணவிகளின் சதவிகிதம் 96.47%. மாணவர்களின் சதவிகிதம் 92.15 சதவிகிதம் ஆகும். மாணவர்களை விட, 4.32 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்
- புதுக்கோட்டை - 1வது இடம்,
- சிவகங்கை - 2வது இடம்,
- தஞ்சாவூர் - 3வது இடம்,
- திருச்சி - 4வது இடம்,
- கன்னியாகுமரி - 5வது இடம்
அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்கள்
- சிவகங்கை - 1வது இடம்,
- புதுக்கோட்டை - 2வது இடம்,
- தஞ்சாவூர் - 3வது இடம்,
- ராமநாதபுரம் - 4வது இடம்,
- திருச்சி - 5வது இடம்.


0 Comments