ராஞ்சியில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பஞ்சாபைச் சேர்ந்த குரிந்தர்வீர் சிங் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்தார்.
10.09 வினாடிகளில் இலக்கை எட்டித் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் அதிவேக மனிதராக அவர் மிளிர்ந்தார். 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.


0 Comments