Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு / Joseph Vijay Sworn in as Tamil Nadu’s 13th Chief Minister

தமிழகத்தின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு / Joseph Vijay Sworn in as Tamil Nadu’s 13th Chief Minister

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், ஆளுநர் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடமே, தான் பதவியேற்ற அதே மேடையில் மக்கள் முன்னிலையில் மூன்று மிக முக்கியமான அரசாணைகளில் கையெழுத்திட்டுத் தனது அதிரடி ஆட்சியைத் தொடங்கியுள்ளார்.

முதலமைச்சரின் முதல் கையெழுத்து தமிழக மக்களின் மின்சாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தை அவர் அமல்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், மாநிலம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" (Singapen Special Task Force) என்ற புதிய பிரிவை உருவாக்கும் கோப்பில் முதல்வர் இரண்டாவது கையெழுத்திட்டார்.

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க, ஒரு பிரத்யேக போதைப்பொருள் தடுப்புப் படையை (Anti-Narcotics Force) உருவாக்கும் கோப்பில் மூன்றாவது கையெழுத்திட்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel