Recent Post

6/recent/ticker-posts

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் / Supreme Court Collegium Approves Appointment of 19 New Judges to Madras High Court

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் / Supreme Court Collegium Approves Appointment of 19 New Judges to Madras High Court

உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 9 வழக்கறிஞர்கள் மற்றும் 10 நீதித்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 19 பேரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்தக்கட்டமாக, இவர்களின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், குடியரசு தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த உத்தரவை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel