2026-27 சந்தைப் பருவத்திற்கான 14 காரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலைகளை உறுதி செய்யும் வகையில், 2026-27 சந்தைப் பருவத்திற்கான காரீப் பயிர்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் சூரியகாந்தி விதைக்கு ஒரு குவிண்டாலுக்கு 622 ரூபாயும், பருத்திக்கு குவிண்டாலுக்கு 557 ரூபாயும், நைஜர் விதைக்கு குவிண்டாலுக்கு 515 ரூபாயும், எள்ளுக்கு குவிண்டாலுக்கு 500 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் கூலி, எந்திர வாடகை, நிலக் குத்தகைக்கான வாடகை, விதைகள், உரங்கள், எரு போன்ற இடுபொருட்களை பயன்படுத்துவதற்கு ஏற்படும் செலவுகள், பாசனத்திற்கான செலவுகள், வேளாண் கருவிகள் மற்றும் பண்ணைக் கட்டடங்களில் ஏற்படும் தேய்மானச் செலவுகள் உள்ளிட்ட நேரடி செலவுகளையும் மற்றும் இதர செலவுகளையும் இது உள்ளடக்கியுள்ளது.
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு மீது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் லாப விகிதம் பாசிப்பயிருக்கு அதிகபட்சமாக 61 சதவீதமாகவும் கம்பு, மக்காச் சோளம் பயிர்களுக்கு தலா 56 சதவீதமாகவும், துவரம் பருப்புக்கு 54 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments