புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி 5 வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது. அடுத்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன.
முதலமைச்சராக ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் செய்து வைத்தார்.
"கடவுளின் பெயரால்" எனக் கூறி ரங்கசாமி பதவி ஏற்று கொண்டார். 9.47 மணி ஆகும் வரை காத்திருந்து கையெழுத்திட்டார். முதலமைச்சருடன் பாஜக சார்பில் நமச்சிவாயம், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.


0 Comments