Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் அமைச்சரவை விரிவாக்கம் / Cabinet Expansion of the Government Led by Chief Minister Vijay in Tamil Nadu

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் அமைச்சரவை விரிவாக்கம் / Cabinet Expansion of the Government Led by Chief Minister Vijay in Tamil Nadu

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது.

அதன் பின்னர், புதிய அமைச்சர்களாக ஸ்ரீநாத், கமலி உள்ளிட்ட 23 பேரும் பதவியேற்றனர். இதில், காங்கிரஸ் சார்பாக ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆஜிய இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  1. ஸ்ரீநாத் - மீன்வளத்துறை
  2. கமலி - கால்நடைத் துறை
  3. விஜயலட்சுமி - பால்வளத்துறை
  4. ரஞ்சித் குமார் - வனத்துறை
  5. வினோத் - வேளாண் துறை
  6. ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
  7. ராஜ்குமார் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகள்
  8. காந்திராஜ் - கூட்டுறவு துறை
  9. மதன் ராஜா- கிராமப்புற தொழில்கள் துறை
  10. ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை
  11. ராஜேஷ்குமார் - சுற்றுலா துறை
  12. விஜய் பாலாஜி - கைத்தறி துறை
  13. லோகேஷ் தமிழ்செல்வன் - வணிக வரி உள்ளிட்ட துறைகள்
  14. விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகள்
  15. ரமேஷ் - இந்து சமய அறநிலையத் துறை
  16. விஸ்வநாதன் - உயர்கல்வித்துறை அமைச்சர்
  17. குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப துறை
  18. தென்னரசு - வெளிநாட்டு வாழ் தமிழர்கள், அகதிகள் & இடம்பெயர்ந்தோர் நலத்துறை
  19. சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  20. முகமது ஃபர்வஸ் - தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகள்
  21. சரத்குமார் - மனிதவள மேலாண்மை துறை
  22. மரிய வில்சன் - நிதித்துறை
  23. விக்னேஷ் - மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை
  24. இதன்மூலம், ஏற்கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அத்துறையிலிருந்து வருவாய் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மரிய வில்சன், நிதித்துறை அமைச்சராக உள்ளார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு விஜய் அமைச்சரவையில் கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள்.

விஜய் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன் , ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel