Recent Post

6/recent/ticker-posts

நவீன நடுத்தர போர்விமானத்தின் மைய ஒருங்கிணைப்பு, விமானப் பரிசோதனை மையம் மற்றும் கடற்படை தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும் அடிக்கல் நாட்டினர் / Defence Minister and Andhra Pradesh Chief Minister Lay Foundation Stones for Advanced Medium Combat Aircraft Integration Centre, Flight Test Centre, and Naval Systems Manufacturing Facility

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில், பல்வேறு உத்திசார் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு ஆகியோர் 2026 ,மே 15 அன்று அடிக்கல் நாட்டினர்.

ஐந்தாம் தலைமுறை நவீன நடுத்தரப் போர் விமானம் மற்றும் பிற எதிர்கால உள்நாட்டுத் தளங்களின் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக புட்டபர்த்தியில் மைய ஒருங்கிணைப்பு மற்றும் விமானப் பரிசோதனை மையத்திற்கும், நீருக்கடியில் இயங்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் கடற்படை அமைப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள டி சிரசபள்ளி கிராமத்தில் கடற்படை தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நவீன நடுத்தர போர்விமானத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு சுமார் ரூ. 15,000 கோடி ஆகும். மேலும், டிஆர்டிஓ -வின் துணை அமைப்பான வானூர்தியியல் மேம்பாட்டு முகமையின் மைய ஒருங்கிணைப்பு மற்றும் விமானப் பரிசோதனை மையம் இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த மையம் ஏறத்தாழ ரூ. 2,000 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel