Recent Post

6/recent/ticker-posts

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம் / India and UAE Sign Key Agreements

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம் / India and UAE Sign Key Agreements

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இன்று (மே 15) டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

அபுதாபியில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயான் முன்னிலையில் பிரதமர் மோடி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

மேலும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த தலைவர்கள், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ஃபின்தெக், உள்கட்டமைப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகள் உட்பட பல துறைகளில் விரிவான மூலோபாய கூட்டாண்மை மேலும் வலுவடைவதை வரவேற்றனர்.

அதோடு இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த பயணத்தின் போது கடல்சார் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ், வாடினாரில் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை அமைப்பதற்காக கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம் மற்றும் துபாயின் டிரைடாக்ஸ் வேர்ல்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கப்பல் பழுதுபார்ப்பில் திறன் மேம்பாடு குறித்து கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம், துபாய் டிரைடாக்ஸ் வேர்ல்ட் மற்றும் கடல்சார் மற்றும் கப்பல் கட்டும் திறன் மேம்பாட்டு மையம் இடையேயான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது திறமையான கடல்சார் பணியாளர்களை திரட்டவும், பயிற்சி அளிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கவும் ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.·

இந்தியாவின் சி-டாக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜி-42 கூட்டுறவில் 8 எக்ஸாஃப்ளாப் சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தை அமைப்பதற்கான விதிமுறைகள் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel