Recent Post

6/recent/ticker-posts

மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்கள் பங்கேற்ற காரீஃப் பயிர் சாகுபடி உத்திகள் தொடர்பான தேசிய மாநாடு / National Conference on Kharif Crop Cultivation Strategies Attended by State Agriculture Ministers

மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்கள் பங்கேற்ற காரீஃப் பயிர் சாகுபடி உத்திகள் தொடர்பான தேசிய மாநாடு / National Conference on Kharif Crop Cultivation Strategies Attended by State Agriculture Ministers

புதுதில்லி, பூசாவில் நடைபெற்ற 'தேசிய வேளாண் மாநாடு - கரீஃப் சாகுபடி இயக்கம் 2026'-ன் இரண்டாம் நாள் கூட்டத்தில், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்றார்.

அவர், இந்திய வேளாண்மையின் முழுமையான வளர்ச்சி குறித்து மாநில வேளாண் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, விவசாயிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் இப்போது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர்கள் திரு ராம்நாத் தாக்கூர், திரு பகீரத் சௌத்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர். தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் திரு ஆர் வினோத், ஒடிசா துணை முதலமைச்சரும், வேளாண் அமைச்சருமான திரு கனக் வர்தன் சிங் தியோ, உத்தரப் பிரதேச வேளாண் அமைச்சர் திரு சூர்ய பிரதாப் ஷாஹி, குஜராத் வேளாண்மை அமைச்சர் திரு ஜிதுபாய் சவ்ஜிபாய் வகானி உட்பட பல்வேறு மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel