முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தப் பதவியில் பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, மத்திய ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முப்படைகளின் தற்போதைய தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சவுகான், மே 30, 2026 அன்று ஓய்வு பெறுகிறார். லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, செப்டம்பர் 1, 2025 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார்.
முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை, ராணுவப் படைத் துணைத் தலைவராகவும், மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை, மத்திய படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 'பரம விசிஷ்ட சேவா பதக்கம்', 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்', 'சேனா பதக்கம்' மற்றும் 'விசிஷ்ட சேவா பதக்கம்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


0 Comments