Recent Post

6/recent/ticker-posts

கேரள முதலமைச்சராக டி.சதீசன் பதவியேற்பு / T. Satheesan Sworn In as Kerala Chief Minister

கேரள முதலமைச்சராக டி.சதீசன் பதவியேற்பு / T. Satheesan Sworn In as Kerala Chief Minister

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை வாரிக் குவித்து தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

கேரளாவில் டி.சதீசன் ஒருவழியாகப் புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகப் பதவியேற்ற கையோடு கூடிய முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு உள்ளிட்ட பல அதிரடி நலத்திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

ஜூன் 15 முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக சம்பள உயர்வு கோரி கேரள தலைமைச் செயலகத்திற்கு முன்பு தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ஆஷா பணியாளர்களின் கோரிக்கைக்கு இந்த கூட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தில் மூன்று ஆயிரம் ரூபாய் அதிரடியாக உயர்த்தி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்துடன் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி சமையல் பணியாளர்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அடித்தட்டு பொதுச்சேவை ஊழியர்களின் மாதாந்திர ஊதியமும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் எனப் புதிய முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel