Recent Post

6/recent/ticker-posts

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு / Tamil Nadu Athlete Vishal Sets Record in 400m Sprint

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு / Tamil Nadu Athlete Vishal Sets Record in 400m Sprint

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அதிரடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு (முழுமையாக) கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேபோல, சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகையில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

ரூ.50,000-க்கு மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரையிலும் கடன் தொகைக்கு ஏற்பப் படிப்படியாகத் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரூ.1,00,000-க்கு மேல் கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள் இருதரப்பிற்குமே தலா ரூ.5,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 14,22,555 விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள்.

இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசுக்குக் கூடுதலாக ரூ.2,044.46 கோடி செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel