பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் 1091 என்ற இலவச பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த உதவி எண் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வகையான குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து நேரடியாக புகார் அளிக்க முடியும்.
குறிப்பாக வன்கொடுமை, பாலியல் தொந்தரவு, பின்தொடர்தல் (Stalking), மிரட்டல், இணையவழி துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி காவல் உதவியைப் பெற இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம்.
மேலும், அவசரகால சூழ்நிலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயிற்சி பெற்ற காவலர்கள் இந்த சேவையை 24 மணி நேரமும் கண்காணித்து செயல்படுத்த உள்ளனர்.
புகார் பெறப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments