கீழடியில் நடைபெற்று வரும் 11-வது கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருட்களும், சுவடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்களும் தென்படுகின்றன. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 9 அகழாய்வு குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது பழங்கால உலைக்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலைக்கலன் இரும்பு தாதுக்களை உருக்கி தங்களுக்கு தேவையான வடிவத்திற்கு ஏற்றவாறு உருக்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.


0 Comments