தமிழ்நாடு வனத்துறை, 'புராஜெக்ட் நீலகிரி வரையாடு' (Project Nilgiri Tahr) திட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 24 முதல் 27 வரை 14 வனக்கோட்டங்களில் இந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டில் வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 1,031 ஆகவும், 2025-ஆம் ஆண்டில் 1,0303 ஆகவும் இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை, தற்போது 2026-இல் மேலும் உயர்ந்து நிலையானதொரு வளர்ச்சிப் பாதையை (Positive Recovery Trend) எட்டியுள்ளது.
இது கடந்த 2025-ஆம் ஆண்டு எண்ணிக்கையை விட 4.68 விழுக்காடு அதிகமாகும். காடுகளில் நேரடியாகக் கண்டறியப்பட்ட வரையாடுகளின் தரவுகளின்படி, முதிர்ந்த பெண் வரையாடுகள் 38.4 விழுக்காடாகவும், முதிர்ந்த ஆண் வரையாடுகள் 34.6 விழுக்காடாகவும் உள்ளன.
இவற்றின் பாலின விகிதம் 100 பெண் வரையாடுகளுக்கு 55 ஆண் வரையாடுகள் (55:100) என்ற அளவில் ஆரோக்கியமாக உள்ளது. மேலும், இதில் ஒரு வயதுடைய இளம் வரையாடுகள் (Yearlings) 15.5 விழுக்காடாகவும், சிறிய குட்டிகள் 11.5 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன.


0 Comments