தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (18.06.2026) தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலைச் செயலாளர் இரா. சாந்தி வெளியிட்டிருந்தார்.
அதன்படி ஜூன் 19ஆம் தேதியான நாளை (வெள்ளிக்கிழமை) சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு, சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. இராமசாமி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, கே. ராஜன் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கப்பட உள்ளது.


0 Comments