Recent Post

6/recent/ticker-posts

2026 ஏப்ரல், மே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 14.66% வளர்ச்சி / Country's exports grow by 14.66% during April-May 2026

2026 ஏப்ரல், மே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 14.66% வளர்ச்சி / Country's exports grow by 14.66% during April-May 2026

நாட்டின் ஏற்றுமதி 2026-27-ம் நிதியாண்டின் ஏப்ரல், மே காலகட்டத்தில் 14.66% அதிகரித்துள்ளது. 2025-26 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 141.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஒட்டுமொத்த ஏற்றுமதியுடன் (சரக்குகள், சேவைகள்) ஒப்பிடுகையில் 2026-27 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 162.69 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 14.66% வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல்-மே 2025-26 காலகட்டத்தில் 76.59 பில்லியன் டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு, ஏப்ரல்-மே 2026-27 காலகட்டத்தில் 88.91 பில்லியன் டாலராக உயர்ந்து, 16.09% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மே 2026-ல் சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக, பொறியியல் பொருட்கள், கரிம - கனிம வேதிப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ரத்தினக்கற்கள், ஆபரணங்கள் ஆகியவை இருந்தன.

பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மே 2025-ல் 9.89 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 12.31 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

மே 2025-ல் 4.57 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 5.10 பில்லியன் அமெரிக்க டாலராக, மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 11.62% அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel