மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த மாதத்திற்கான (மே, 2026) நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி தேசிய அளவிலான சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் இது 4.25 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 3.53 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
நுகர்வோர் உணவுப் பொருட்கள் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான உணவுப் பொருட்களின் பணவீக்கம் ஒட்டுமொத்தமாக 4.78 சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கிராமப்புற உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.85 சதவீதமாகவும், நகர்ப்புற உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.66 சதவீதமாகவும் உள்ளது.
வீட்டுவசதிக்கான பணவீக்கம் தேசிய அளவில் 2.12 சதவீதமாக உள்ளது. முக்கிய நுகர்வுப் பொருட்களில் உருளைக்கிழங்கு, பட்டாணி, மோட்டார் கார் ஆகியவை குறைந்த பணவீக்கத்தைக் கொண்டுள்ளன.
அதே நேரத்தில் வெள்ளி ஆபரணங்கள், தக்காளி, தங்கம் ஆகியவை அதிக பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ளன. மாநில அளவில் தெலங்கானா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக பணவீக்கத்தைக் கொண்டுள்ள முதல் மூன்று மாநிலங்களாக உள்ளன.
மே மாதத்திற்கான விலை விவரங்கள் 1407 நகர்ப்புறச் சந்தைகள், 1465 கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு, முழுமையாகவும், துல்லியமாகவும் இத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


0 Comments