சீனாவின் குயாங் நகரில் சர்வதேசக் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் நடைபெற்ற மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோதி உஸ்பெகிஸ்தான் நாட்டின் முன்னணி வீராங்கனையான பர்ஜோனா போஜிலோவாவை எதிர்கொண்டார்.
நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி 5-0 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி ஜோதி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். 51 கிலோ எடைப்பிரிவில் மீனாட்சி போராடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பிராச்சி 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் தீவிரமாகப் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 70 கிலோ எடைப்பிரிவில் தீபக் இறுதிச் சுற்று வரை சென்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
உலகக் கோப்பை குத்துச்சண்டை அரங்கில் 1 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்களை வென்று இந்தியக் குத்துச்சண்டைக் கூட்டணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.


0 Comments