சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவின் ஃபஜார் அல்ஃபியான் - முகமது ஃபிக்ரி ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.
சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இந்தோனேசியா ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.


0 Comments