மத்திய அரசின், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் என்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த 3 அதிநவீன போர்க் கப்பல்களையும் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட 3 முன்னணிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.
இந்த கப்பல்கள், கடற்சார் போர், நீரியல் அளவீடு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் ஆகிய துறைகளில் முக்கிய செயல்பாட்டு திறன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
மேலும் இந்த கப்பல்களின் கட்டுமானத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


0 Comments