Recent Post

6/recent/ticker-posts

எதிரி நாடுகளின் தாக்குதலை முறியடிக்கும் 3 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி / Successful Test of Three State of the Art Missiles Capable of Thwarting Enemy Attacks

எதிரி நாடுகளின் தாக்குதலை முறியடிக்கும் 3 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி / Successful Test of Three State of the Art Missiles Capable of Thwarting Enemy Attacks

ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., கடந்த 10ம் மற்றும் 11ம் தேதிகளில் அடுத்த தலைமுறை பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு திறன்களை வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்தது.

இந்த சோதனையின் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வல்லமையை இந்தியா உலகிற்கு நிரூபித்துள்ளது.

வான்வெளியின் உள்ளேயும், வெளியேயும் பாய்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் மூன்று தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் மூலம் சர்வதேச அளவில் மிகச்சில நாடுகள் மட்டுமே கொண்டுள்ள அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

தற்போது 'மிஷன் சுதர்சன் சக்ரா' என்ற வியூகத்தின் கீழ் நாட்டின் முக்கிய ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புகளை பாதுகாக்க கவசமாக இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel