Recent Post

6/recent/ticker-posts

300 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister S. Joseph Vijay Inaugurates 300 New Bus Services

300 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister S. Joseph Vijay Inaugurates 300 New Bus Services

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்செயலகத்தில், போக்குவரத்துத்துறை சார்பில் 127 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் 300 புதிய பஸ்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

அதன்படி, பொதுப்போக்குவரத்து சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநகர் போக்குவரத்துக்கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு 36 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பஸ்கள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பஸ்களில் 164 டீசல் பேருந்துகளும், BS VI இணக்கமான, குறைந்த மாசு உமிழ்வு கொண்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 CNG பஸ்களும் அடங்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel