Recent Post

6/recent/ticker-posts

விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு / Chief Minister Vijay Orders Full Waiver of Crop Loans up to ₹75,000 for Farmers

விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு / Chief Minister Vijay Orders Full Waiver of Crop Loans up to ₹75,000 for Farmers

கடந்த மே மாதம், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இருந்து வந்த கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்தது. இதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனை நடத்தினர்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் அதன் முழுத் தொகையையும் மாநில அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.

இதனையும், தமிழக அரசின் தற்போதைய நிதிநிலையையும் கருத்தில் கொண்டு புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel