Recent Post

6/recent/ticker-posts

ஐ.நா. சபையின் தலைவராகிறார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரக்மான் / Bangladesh Foreign Minister Khalilur Rahman Set to Become President of the UN General Assembly

ஐ.நா. சபையின் தலைவராகிறார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரக்மான் / Bangladesh Foreign Minister Khalilur Rahman Set to Become President of the UN General Assembly

ஐக்கிய நாடுகள் சபையின் 81 வது அவையின் தலைவருக்கான தேர்தல் நேற்று (02-06-26) நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரக்மான் மற்றும் சிப்ரஸ் நாட்டின் சிறப்புப் பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அவைக்கு, தலைமை வகிப்பதற்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 190 நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், வங்கதேசத்தின் கலிலூர் ரக்மான் 99 வாக்குகளைப் பெற்றுப் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சப்ரஸ் நாட்டின் ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் 91 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 96 வாக்குகள் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 81 வது அவைக்கு கலிலூர் ரக்மான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel