தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிரடிப்படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 02 டிஎஸ்பி, மற்றும் 04 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடந்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
அப்போது பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை வாகனத்தில் சென்று முதல்வர் பார்வையிட்டார். அதன் பின்னர் எஸ்.பி ஷானாஸ் தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படை காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.


0 Comments