Recent Post

6/recent/ticker-posts

கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் பதவியேற்பு / D.K. Shivakumar Sworn In as New Chief Minister of Karnataka

கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் பதவியேற்பு / D.K. Shivakumar Sworn In as New Chief Minister of Karnataka

கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக இன்று டிகே சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

டிகே சிவக்குமாருடன் மொத்தம் 13 பேர் பதவியேற்று கொண்டனர். இதில் ஒருவர் துணை முதல்வராகி உள்ளார். மற்ற 12 பேர் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர். அமைச்சர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதையடுத்து அமைச்சர்களாக கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிகோளி, கிருஷ்ணபைரே கவுடா , பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்), யுடி காதர், ஈஸ்வர் காண்ட்ரே, யதீந்திரா சித்தராமையா (முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்), பைரதி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல் உள்ளிட்டோர் பதவியேற்று கொண்டனர்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel