தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஒரு மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் வழிகாட்டியாக தொலைநோக்கு ஆவணம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தத் திட்ட அறிக்கையானது, உலகப் பொதுமறையான திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 10 முக்கியத் தூண்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவை 54 துணைத் தூண்களாக வகைப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்தமாக 436 தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன

0 Comments