ஹெர்பாலைஃப், ஐஐடி மெட்ராஸ் இணைந்து, இந்தியாவின் முதல் தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்திற்கான உயர்சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் தாவர அடிப்படையிலான ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஹெர்பாலைஃப் இண்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் 'ஹெர்பாலைஃப்- ஐஐடி மெட்ராஸ் உயர் சிறப்பு மையத்தைத் (Centre of Excellence on Plant Cell Fermentation Technology) தொடங்கியுள்ளது.
இதன் மூலம் தாவரங்களிலிருந்து உடல்நலத்திற்கான தேவையான பொருட்கள் உருவாக்கப்படவுள்ளது. தாவர செல் நொதித்தலைப் பொறுத்தவரை பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவிலேயே இதுதான் முதலாவது பிரத்யேக ஆய்வகமாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம் கடந்த ஜூன் 22-ம் தேதி தொடங்கப்பட்டது.
தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தில் நிலையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான தேசிய மையமாக இதனை திகழ் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


0 Comments