Recent Post

6/recent/ticker-posts

கேரளாவில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Kerala Chief Minister V.D. Satheesan flags off free bus travel scheme for women

கேரளாவில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Kerala Chief Minister V.D. Satheesan flags off free bus travel scheme for women

கேரளத்தில் ஜூன் 15 முதல் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திட்டம் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (15-06-26) கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தற்போதைக்கு அரசு நகரப் பேருந்துகளில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், வருங்காலங்களில் இந்த திட்டம் விரைவு பேருந்து உள்ளிட்ட மற்ற பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முன்னதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் மூலமாகப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel