Recent Post

6/recent/ticker-posts

இந்திய புதிய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் / Lieutenant General Dheeraj Seth Appointed as New Indian Army Chief

இந்திய புதிய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் / Lieutenant General Dheeraj Seth Appointed as New Indian Army Chief

தற்போதைய ராணுவத் தளபதியாக இருக்கும் ஜெனரல் உபேந்திர திவேதி, நடப்பு மாதம் ஜூன் 30-ஆம் தேதியுடன் தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 30-ஆம் தேதி பிற்பகல் முதல் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தேசியப் பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான தீரஜ் சேத், கடந்த 1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தின் கவசப் படையில் தனது பணியைத் தொடங்கினார்.

கடந்த 40 ஆண்டுகால ராணுவ சேவையில், பல்வேறு சவாலான எல்லைப் பகுதிகளில் மிக முக்கியப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய அனுபவம் இவருக்கு உண்டு.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel