தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஒரு எளிய பின்னணியில் பிறந்த வி. மோகனா, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற வரலாற்றை பெற்றிருக்கிறார்.
1983-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் மாணவியான இவர், கோவை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, 1980-களின் இறுதியில் கோவை மாவட்ட நீதிமன்றங்களில் தனது பணியைத் தொடங்கினார்.
பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் (Permanent Commission) வழங்க வேண்டும் என்ற வழக்கில் வாதாடி அவர் முன்வைத்த வாதங்கள் தான்.
இது பலரது கவனத்தை பெற்றதுடன் இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்துக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அவரது சட்டத் திறமையை அங்கீகரித்து, 2015-ல் உச்சநீதிமன்றம் இவரை 'மூத்த வழக்கறிஞர்' ஆக அங்கீகரித்தது.
வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவார்கள். ஆனால், வழக்கறிஞர் பணியிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாவது மிகவும் அரிதான ஒன்று.
நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்குப் பிறகு, இந்த வழியில் நீதிபதியாகும் இரண்டாவது பெண் மோகனா ஆவார். அதேசமயம், தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண்ணும் இவர்தான்.


0 Comments