Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றம் / Tamil Nadu Assembly Passes Resolution Opposing the Mekedatu Dam Project

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றம் / Tamil Nadu Assembly Passes Resolution Opposing the Mekedatu Dam Project

காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். 

இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. முன்னதாக தீர்மானம் குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மேகதாது பிரச்னைக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை, தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய், அரசின் தனித் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை நான்காவது பத்தியாக சேர்க்கலாம் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தீர்மானம் ஒருமனதக நிறைவேறியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel