Recent Post

6/recent/ticker-posts

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழு - தமிழக அரசு உத்தரவு / Tamil Nadu Government Orders Formation of New Curriculum Design Committee Led by Mylswamy Annadurai

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழு - தமிழக அரசு உத்தரவு / Tamil Nadu Government Orders Formation of New Curriculum Design Committee Led by Mylswamy Annadurai

பள்ளி பாடத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதன் தலைவராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செயல்படுவார்.

விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 பேர் உறுப்பினராக இருப்பார்கள்.

மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் இக்குழுவின் உறுப்பினர் - செயலராக செயல்படுவார். உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். 

தற்போது 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புதிய குழு, 4-ம் வகுப்பு முதல் புதிய பாடத் திட்டத்தை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கும். குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்படியாக புதிய பாடத்திட்டம் பின்பற்றப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel