Recent Post

6/recent/ticker-posts

ஆந்திர மாநிலம் அமராவதியில் மத்திய அரசு அலுவலகங்களுக்கான பொதுத் தொகுப்புக் கட்டடங்கள் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of a General Pool Office Complex for Central Government offices in Amaravati, Andhra Pradesh

ஆந்திர மாநிலம் அமராவதியில் மத்திய அரசு அலுவலகங்களுக்கான பொதுத் தொகுப்புக் கட்டடங்கள் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of a General Pool Office Complex for Central Government offices in Amaravati, Andhra Pradesh

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் அமையவிருக்கும் புதிய தலைநகரில் மத்திய அரசு அலுவலகங்களுக்கான பொது தொகுப்புக் கட்டடம் கட்டுவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு ரூ.1,299.08 கோடி ஆகும்.

உலகத் தரம் வாய்ந்த புதிய நகரமான அமராவதியில், இந்தத் திட்டம் ஒரு மைல்கல் முன்முயற்சியாகும். பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களை ஒரே குடையின் கீழ் அமைப்பதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும்.

இந்த ஒருங்கிணைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் சேவைகள் எளிதில் சென்றடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் புதிய தலைநகரில், மத்திய அரசு பொது அலுவலகக் கட்டடம் 5.53 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இது இரண்டு தொகுதிகளைக் கொண்டதாக அமைக்கப்படும். தரைத்தளத்துடன் 13 தளங்களைக் கொண்ட ஒரு தொகுதி, தரைத்தளத்துடன் 10 தளங்களைக் கொண்ட மற்றொரு தொகுதியும் கட்டப்படும்.

இந்த வளாகம் சுமார் 8,000 அதிகாரிகள், பணியாளர்கள் பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1,800 கார்களை நிறுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டும். இந்தத் திட்டத்தின் மொத்தக் கட்டப்பட்ட பரப்பளவு 23,25,000 சதுர அடி (2,16,032 சதுர மீட்டர்) ஆகும்.

கட்டுமானக் கட்டத்தின் போது, ஆண்டுக்குச் சுமார் 7,00,000 மனித-நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் செயல்பாட்டுக் கட்டம் ஆண்டுக்குச் சுமார் 50,000 மனித-நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel