Recent Post

6/recent/ticker-posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் விக்ரம்-1 / India's First Private Orbital Rocket, 'Vikram-1', Successfully Launched

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் விக்ரம்-1 / India's First Private Orbital Rocket, 'Vikram-1', Successfully Launched

இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உள்நாட்டு தனியார் நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட்டான 'விக்ரம்-1' இன்று (ஜூலை 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 11.30 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேகமூட்டம் சார்ந்த வானிலை காரணமாக 35 நிமிடம் தாமதமாக பகல் 12.05க்கு விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ராக்கெட்டின் பயணத்துக்கு 'மிஷன் ஆகமன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம், தான் சொந்தமாக உருவாக்கிய ஏவுதளத்தை பயன்படுத்தி செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும்.

350 கிலோ வரை எடை கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை 450 கிமீ தூரத்தில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel