Recent Post

6/recent/ticker-posts

உத்தரப்பிரதேசத்தில் ரூ.14,447.64 கோடி செலவில் என்எச்-19-வாரணாசி வட்டச்சாலை இடையே உயர்த்தப்பட்ட 6 வழித்தடங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of an elevated 6-lane corridor connecting NH-19 and the Varanasi Ring Road in Uttar Pradesh at a cost of Rs 14,447.64 crore.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் என்எச்-19 - வாரணாசி வட்டச்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் வழித்தடத்தை அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்வைக்குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கங்கை நதிக்கரையோரம் போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், 46.039 கிமீ தொலைவிலான இத்திட்டத்தில் 6 வழித்தடங்களைக் கொண்ட உயர்மட்ட முக்கியச் சாலை மேம்பாலம், வளைவுப் பாதைகள், இணைப்புச் சாலைகள், உள்ளிட்டவை இதில் அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.14,447.64 கோடியாகும். இதில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு ரூ.6,037.85 கோடியும் நிலம் கையகப்படுத்துதலுக்கான செலவு ரூ.541.11 கோடியாகும்.

இத்திட்டம் என்எச்-19 – வாரணாசி வட்டச்சாலை இடையே தடையற்ற போக்குவரத்து வசதியை அளிக்கும். அத்துடன் நகரப் போக்குவரத்தில் உள்ள நெரிசலைக் குறைத்து போக்குவரத்தை மேம்படுத்தும்.

மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பயண நேரத்தை 60 நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

என்எச்-19 - காசி ரயில் நிலையம் இடையேயான பயண நேரம் 50 நிமிடங்களிலிருந்து 25 நிமிடங்களாகக் குறையும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel