Recent Post

6/recent/ticker-posts

பர்கூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மண் குவளைகள் கண்டெடுப்பு / 2,000-Year-Old Earthen Vessels Unearthed Near Bargur

பர்கூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மண் குவளைகள் கண்டெடுப்பு / 2,000-Year-Old Earthen Vessels Unearthed Near Bargur

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரையடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் வெள்ளச்சியம்மாள் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த நடுகல்லுக்கு கோயில் கட்டுவதற்காக குழிதோண்டும் பணி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் கிடைத்தன.

இவை 5 செ.மீ. உயரமும், 10 செ.மீ. அகலமும் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண சிறு குவளைகள் ஆகும். இது மட்டுமல்லாமல் 10 செ.மீ. உயரமும் 16 செ.மீ. குறுக்களவும் கொண்ட சற்று பெரிய கருப்பு சிவப்பு வண்ண மண் பாண்டம் சிறிது உடைந்த நிலையில் கிடைக்கப் பெற்றது. சுமார் ஒன்னேகால் அடி விட்டம் கொண்ட கருப்பு சிவப்பு வண்ணத் தட்டு ஒன்றும் உடைபட்ட நிலையில் கிடைத்துள்ளது.

குவளைகளில் சம இடைவெளிகளில் மூன்று இறந்த தலைவனின் குல கோடுகளாக வரையப்பட்டுள்ளன. இவை ஆறு கட்டங்களைக் கொண்டதாக உள்ளன.

இது மட்டுமல்லாமல் கொம்பு போன்று செய்யப்பட்ட ஐந்து மண்ணாலான பகுதிகள் ஜாடி போன்ற மட்கலனின் தாங்கிகளும் கிடைத்துள்ளன.

இவை ஜாடியின் அடிப்பகுதியில் காணப்படும். 32 செ.மீ. விட்டமும், 15 செ.மீ. உயரமும் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண வாணலி மண்பாண்டம் கிடைத்துள்ளது.

இது மூடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறுசிறு வானைகள் உடைந்த நிலையிலும் கிடைத்துள்ளன. இந்த மண்பாண்டங்களில் அனைத்தும் குலக்குறியீடுகள் கீறப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel