இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்திச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.1,27,500 கோடி மதிப்பிலான, 'செமிகான் 2.0' திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கு தொடர்ச்சியான, நீண்டகால ஆதரவு தேவை என்பதை கருத்தில் கொண்டும் 'செமிகான் 1.0' திட்டத்தின் மூலம் ஏற்பட்ட விரைவான உற்பத்தித் திறனை தக்க வைத்து கொள்வதற்கும், உலகளவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதை 'செமிகான் 2.0' நோக்கமாகக் கொண்டுள்ளது.
'செமிகான் 2.0' திட்டம் பின்வரும் ஆறு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான சூழல் அமைப்பை முழுமையாகக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
'செமிகான் 2.0' திட்டம், சிப் வடிவமைப்பில் ஏற்கனவே கிடைத்துள்ள தொடக்க நிலை வெற்றியை விரிவுபடுத்த உதவிடும். ஏற்கனவே 105 புத்தொழில் நிறுவனங்கள் சிப் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வடிவமைப்புச் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
மேலும், உத்திசார் மற்றும் வணிக ரீதியான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான முக்கியக் கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்முறையைப் பின்பற்றி அறிவுசார் சொத்துக்கள், சிப் வடிவமைப்புகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதே 'செமிகான் 2.0'-ன் நோக்கமாகும்.


0 Comments